புதிய உலகம் கண்டேன்


அமைதி  வணக்கம்,

நான்  தமிழில் பிழை இன்றி எழுதியதில்லை…இருப்பினும் கவனித்து எழுதுகிறேன் தவறு இருந்தால் பொறுத்தருள்க/சுட்டிக்காமிக்கலாம்.

எனக்கு ஊக்கம் அளித்த அன்பு நண்பர்களுக்கும் இருவரை குறிப்பிட்டே ஆகவேண்டும் “ஓஜஸ் , அழகியதமிழ்” அவர்களின் உதவிகளுக்கும் நன்றி கூறி ஆரம்பிக்கிறேன். தமிழில் நாட்டம் இருந்தும் பெரிதும் புத்தகம் படிக்க வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்னவோ இல்லை…இப்பொழுது நானே எனக்கான நேரம் ஒதுக்கி படிக்க ஆரம்பித்துள்ளேன் இதற்கு முழுமுதற் காரணம் என் நண்பர்களே என்று சொல்லுவேன் , எப்படி பட்ட புத்தகங்கள் படிக்கலாம் , எனக்கு ஏற்ற புத்தகங்கள் தேர்வு செய்வது எப்படி , சில ஆசிரியர்களின் புத்தகங்கள் எப்படி பட்ட கருத்துகள் உள்ளடங்கும் என்பதெல்லாம் அவர்களிடம் தான்  கற்க ஆரம்பித்து இருக்கிறேன் ..கற்க வேண்டும்.

images (4)நான் முதலில் படிக்க ஆரம்பித்தது என்னவோ சிறுகதைகள் தான் …. சில நேர தாமதத்தால் நான் புத்தகம் படிப்பதை சிறிது காலம் தொலைத்துவிட்டேன்(நிம்மதியும்). தற்போது அந்த நேரத்தை சேர்த்தார் போல் மிகவும் அதிக ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

பதிவின் கருத்துக்கு வருகிறேன் , நீண்ட நாளுக்கு பின் எனக்கான முதல் (ஆர்வத்துக்டன்) வாங்கி படித்த புத்தகம் கொஞ்சம் அறிவியல் கதை – என்.சொக்கன்” .இப்புத்தகுதுடன் என் சுவாரசிய படிப்பை துவங்கினேன். புத்தகம் வாங்கி ஆரம்பித்த ஒரே நாளில் முடித்தும் விட்டேன்..

அனைத்து கதைகளும் அன்றாடம் நம்மாள் உபயம் செய்யும் பொருட்களின் கண்டுபிடிப்பு கதைகள்.ஒவ்வொரு கதையின் பின்னணியிலும் ஆழ கருத்துகள் அமைந்து இருந்தது கண்டு வியந்தேன்.கதைகள் படிக்கையில் அக்கால கட்டத்துக்குள் போவது போன்றதோர் ஈர்ப்பும் கொண்டேன்.அனைத்து கதைகளும் குறும்பக்கங்கள் கொண்டது தான் ஆனால் எழுத்துக்கள் பரிமாறிய விதம் சற்று அருமை என்றே சொல்லுவேன் .

கதையின் தொடக்கம் முதல் முடிவு வரை சற்றும் சலிக்காமல் நகர்ந்ததும், என் ஆர்வத்தை கூட்டியதற்கும் ஆசிரியருக்கு என் அன்பு நன்றி.இத்துடன் அடுத்த புத்தகம் ஆரம்பிக்க ஆர்வத்துடன் நண்பர்களை அணுகினேன் உதவிக்காக…உதவியும் கிடைத்தது.என் ஆர்வமும் அதிகரித்தது.

கலீல் கிப்ரான் அவர்களால் எழுதி தமிழில் – என்.சொக்கன் அவர்கள் தழுவியுள்ள புத்தகம் பெயர் “மிட்டாய் கதைகள்”, அதற்க்கு ஏற்ப கதைகளும் இனிப்பாகவும் மிட்டாய் போன்று சிறியதாகவும் அமைய பெற்றுள்ளது.50 கதைகளை உள்ளடக்கிய புத்தகம் என்றாலும் பல சின்ன சின்ன சுவாரசியமான கருத்துக்களை உள்ளடங்கியது.

ஒவ்வொரு கதையின் துவக்கத்திலும் புதிதாக பிறப்பது போன்று புது ஆரம்பம் புதிய சுவாரசியம். சின்ன சின்ன கதைகள் என்றாலும் மனதை கொள்ளையடிக்கும் கதைகள் பல, சிறு உதாரணமாக பனித்துளியின் அழகு கற்பனை எழில் (உலகம்) சொல்ல வார்த்தைகளும் இல்லை.

” புத்தகங்கள் படிக்க

தனி உலகம் நுழைய

அமைதியின் தென்றலும்

இனிமையின் கீதமாக

எழுத்துக்களை சுவாசிக்கலாம் ! “

மேலும் இது போன்ற பதிவுகள் வர வாய்ப்பும் இருக்கிறது என்று கூறிகொள்கிறேன் . என் நண்பர்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன் .

புத்தக ஆர்வத்துடன்,

தோழி

images (1)

Advertisements

சொற்கள் என்னிடம் ! !


என்னை உச்சரித்தும் 

என்னை உன்மனதோடு ரசிப்பதும்   

சமுதாயத்தின் செயல் தான் ..

இந்த சமுதாயத்தை மாற்ற எனக்கு எந்த அளவு வலிமை இருக்கிறதோ அதே அளவு ஒவ்வொரு மனிதனின் சிந்தனையும் இருக்கிறது..சொல் வடிவம் பெறுகிறது.

உன்னால் (சமுதாயம் )என்னை(மனிதன்) எழுதமுடியாமல் செய்ய முடியும், ஆனால் சிந்திக்கதடை செய்யமுடியாது .வார்த்தைகளின் உணர்ச்சிகளை அனைவராலும் உணரமுடியாது. எந்தன் உணர்ச்சிகளை என் அனைத்து சொற்களும் பிரதிபலிக்கும் .ஒவ்வொரு சூழ்நிழையும் ஒவ்வொரு உணர்ச்சிகளை கொண்டு நகர்கிறது .பல சமையங்களில் சொற்கள் தாறுமாறாக வெளிக்கொண்டு அதனால் மனங்களை காயப்படுத்துகிறது.

             என்ன தான் மனம் நொந்து இருப்பினும் சிலரின் பேச்சுக்கள் நமக்கு ஆறுதல்,நம்பிக்கையும் தான் .உங்கள் காயங்களுக்கு மருந்தவதும் நானே(சொற்கள்) சில தருங்களில் புண்படுத்துவதும் நானே.கண்கள் மூடியும் வெளிச்ச்சுத்டன் நம் உலகை காணவைப்பது சொற்களே.

இப்பதிவு சற்று மோசம் தான் இருப்பினும் பொறுத்தருள்க ..

சொற்கள்

என்னை கோர்த்து பொருள் கொண்டீர்

என்னை வைத்து அழகு சேர்த்தீர்

என்னை பூட்டி கவி வரைந்தீர்

என்னை கொண்டு உணர்ச்சி உணர்ந்தீர்

அழகு சீர் அமைய கொண்டீர்

என்னை உங்களில் கொண்டீர்…

சொற்களால் அல்ல

சிந்தனையால்…

உணர்ச்சிகளால்….

நினைவுகளால்..

கவியால்…w