பிம்பமாய் இருள் – வெளிச்சம்


நண்பர்களுக்கு வணக்கம்,

என்னடா தலைப்பே ஒரு மாறி இருக்கு பாக்குறீங்களா அப்படித்தாங்க நான் சொல்ல போகும் கதை இருளில் ஒளிந்த சில வெளிச்சம்வரா கதை. நண்பர் ஒருவரால் ஒரு கதை படிக்க நேரிட்டது  “காஞ்சனை” கதை.அதன் தாக்கமோ இப்பதிவு எழுத தூண்டிட்டது.

எனக்கோ எந்த கதை கதாபாத்திரம் படித்தாலோ அந்த கொஞ்ச நாளுக்கு நினச்சுட்டே இருக்க தோணும். இந்த கதையைப் படித்ததும் என் பழைய நியாபகங்கள் வர ஆரம்பித்தது.ஒன்னும் இல்லங்க பேய் பட பாக்குற எபெக்ட்டுல இருக்கும் சொல்றேன் ….ஆனா மொக்கையா இருந்தா திட்டாதீங்க.முழுவதும் உண்மை கற்பனை இல்லை இப்பவே சொல்லிடுறேன்.

இரவு நேரங்களில் படிக்கிற பழக்கம் இருக்கும் சுமார் இரண்டு மணி வரை அளவும் படிப்பேன். (இப்போ இல்ல! ). நான் தங்கி இருந்த விடுதி சற்று காட்டிற்குள் இருப்பது போன்று அமைப்பு இருக்கும். விடுதி என்னமோ சுடுகாட்ட மாத்தி கட்டிருக்காங்கனு ஒரு கட்டுக்கத வேற அப்போ இருந்தது. எனக்கோ கடவுள் நம்பிக்கை உண்டு அதைவிட இருட்டு பயம் அதிகம் ( பலருக்கும் இருக்கும் ஆனா வெளிய காமிச்சுக்க மாட்டாங்க,எனக்கு பயம் உண்டு)(சு…சு சொல்லிடாதீங்க ! ).அதுனாலையே என்ன இருட்டா இருந்தாலும் யாருடைய உதவியோட தான் போவேன் வருவேன். விடுதியில் இருந்ததால் ஆட்கள் எப்பவும் இருப்பாங்க ஆனா ஒரு சில நிகழ்வுகள் என்னை ரொம்ப ஸ்தம்பிக்க வைத்தது.

இரவு வேளைகளில் படிகின்ற நேரம் அல்லவா கொஞ்சம் பிஸியாவே படிப்பேன் மணி பார்கவும் மாட்டேன்,  மணி கரெக்டா பன்னிரெண்டு என்ற வாக்கில் எங்கள் விடுதி பக்கம் இருக்கும் அனைத்து நாய்களும் அழுவது போல சத்தம் கேட்கும் முதல் கொஞ்ச நாள் அவ்ளோ பயம் தெரியல .நாட்கள் செல்ல செல்ல நாய்களில் எண்ணிக்கையும் அதிகம் ஆனது, அவைகளின் அழும்சத்தமும் அதிகமானது, கூடவே டெவில் சவுண்ட் எபெக்ட் வேற ( காத்த சொன்னேன் ). இதெல்லாம் பரவா இல்லன்னு பாத்தா கட்டுகதை கொடூரமா போச்சு, விடுதி அருகில் ஓர் குளம் இருக்கிறது .எங்கள் விடுதியில் இருந்து பார்த்தா அந்த குளம் தெரியும்.அந்த குளத்தில் யாரோ ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும். அவருடையநினைவுகள் இங்கயே இருப்பதாகவும் சொன்னார்கள் பலர் ( உண்மையோ / பொய்யோ ஆனா நம்ப வச்சுடாங்க , மீ பாவம் )

scary 1

அதன் பொருட்டு பலசமையங்களில் ( இரவு வேளைகளில் ) விடுதி வழி (வராண்டா) நெடுக “ஓ” என்பார் போன்று ஆள்நடமாட்டம் இன்றி இருக்கும் ,பலர் கொலுசொலி கேட்டதாகவும் சொல்லியுள்ளனர். நான் நம்ப தயங்கினேன் ஆனா அதையும் நம்பும் வகையில் ஓர் நாள் இரவு ஒரு நிகழ்வு நடந்தது,

எப்பொழுதும் போல படித்துகொண்டிருந்த நான் சற்று காற்றாடஇருக்கலாம் என வராண்டா வந்தேன் அச்சமையம் அறைகள் பெரும்பாளானவை பூட்டப்பட்டு இருந்தது நியாபகம் மேலும் விடுதி பாதி காலியாக இருந்தது. சற்று நேரம் எப்.எம் கேட்டபடி அமர்ந்து இருந்தேன் ,அந்த இசையையும் மீறி எனக்கு கொலுசொலி கேட்டது சற்று சுற்றி பார்த்தேன் ஆட்கள் யாரும் இல்லை மேலும் என்னை தவிர்த்து என்னுடன் இருந்த மற்றொருவரும் அதே போன்று ஒலி கேட்டாதாக எனக்கு சொன்னார், பயம் சற்று வர ஆரம்பித்தது மேலும் அதே வேளை (நன்றாக நினைவுள்ளது) எங்கள் விடுதி அறைக்கு அருகில் மூன்று நான்கு நாய்கள் சத்தமாக அழும் குரல் போன்று ஓசை எழுப்பியது

இத்துடன் ஆந்தை சத்தம் வேறு எங்களை பயத்தின் உச்சிக்கு ஏற்ற இன்னும் ஒரு சத்தமாக கதவுகள் சாத்தும் சத்தம் (காற்றினாலே தான்) உஸ்ஸ்ஸ்…. ஒரே ஓட்டமாக அறைக்கு சென்று படுத்தது தான் நியாபகம் தூக்கம் வராமல் அந்த விலங்குகளின் சத்தம் ஒலித்துக்கொண்டே இருந்தது ( அப்படியே அலுப்பு தெரியாமல் தூங்கியும் விட்டேன் ) . காலையில் எழும்ப அதிக நேரம் ஆய்டுத்து எழும்பி விசாரித்தப் பொழுது விலங்குகள் சத்தம் பெரும்பாலானோருக்கு கேட்டதாகவும் நிறைய நேரம் (கிட்ட தட்ட மூன்று நான்கு மணி நேரம் ) கேட்டதாகவும் அறிந்து கொண்டேன். அந்த நாளில் இருந்து தான் எனக்குள்ளான பயம் ரொம்ப அதிகம் ஆனது தினம் இரவு மணி 12 என்ற வாக்கில் விலங்குகள் அழும் சத்தம் கேட்க ஆரம்பிக்கும் மேலும் பல மணிநேரம் தொடரும் காதுகள் மூடி படுத்தும் கேட்டு கொண்டே இருக்கும் பயத்தில் பல நேரம் அழுவதும் உண்டு காரணமே இல்லாமல் ( ஏன், எதற்கு என்று இன்றும் தெரியவில்லை )

அமானுஷ்யம் உள்ளதா இருக்கிறதா என்று தெரியாது ஆனால் சில சம்பவங்கள் அது இருப்பதாகவே நம்மை நம்ப scary 2வைக்கிறது. மேலும் இரு நிகழ்வை இங்கு பதிவு செய்கிறேன். நானும் என் தோழியும் என் அறையில் (மதிய வேளையில்) படித்து சற்று கண் அயர்ந்தோம் நானோ உண்ட மயக்கம் போன்று நன்றாக உறங்கிவிட்டேன். என் தோழியோ சற்று நிம்மதி இன்றி முழு நிலை தூக்கம் இன்றி இருந்தார், ஒரு அரை மணி நேரம் இருக்கும் தூங்க ஆரம்பித்து என் தோழிக்கோ யாரோ தன்னை தள்ளுவதாகவும் அவர் என்னை உதவிக்கு அழைக்க சத்தம் போடுவதாகவும் ஆனால் அவரால் என்னை கூப்பிடும் அளவிற்கும் சத்தம் எழுப்ப முடியாமல் தன்னை எதோ அமுக்குவதாகும் கூறினார். பதறிபோய் எழும்பவும் முடியாமல் திரும்பவும் முடியாமல் சற்று நேரம் மூச்சு விட கஷ்ட்ட பட்டு பின் இயல்பு நிலை அடைந்ததாக கூறினார். இந்த நிகழ்வு அவர் கூறி தான் எனக்கு தெரியும் ( “நல்ல கும்பகர்ணன் போல தூங்குனனு தெரிது” என்று உங்கள் குரல் கேக்குது )

இது போன்ற சம்பவங்கள் பலருக்கு நடந்து இருப்பதகாக இதனை மற்றவர்களிடம் பகிர்ந்த பின் தெரிந்து கொண்டேன்.இது போன்றே என் நண்பர் படித்து கொண்டு இருக்கும் பொழுது தன் மேல் எதோ ஓர் அழுத்தம் யாரோ செய்வதாகவும் மேலும் கழுத்தை அமிக்கி கத்த விடாமல் செய்வதாகவும் கூறினார். இம்மாதிரியான பல நிகழ்வுகள் கேட்ட வண்ணம் என்னுள் பயம் அதிகமான வண்ணமே இருந்தது.

பல சமையங்களில் யோசித்ததுண்டு பகல் வேளைகளில் நம்முள் உள்ள துணிச்சல் இரவு வேளைகளில் எங்கு இருளுக்குள் ஒளிந்து விடுகிறதா என்று . இது எல்லாம் கற்பனை என்று மனம் ஒப்புகொள்ள முடியவில்லை ஆனால் நிஜம் என்றும் ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை

பேய் இருக்கா இல்லையா தெரியாது ஆனா கடவுள் இருக்காரு. நன்மை உண்டெனில் தீமையும் இருக்கும் அது போலவே இதுவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.(யார் கண்டா…) . சரி இத்துடன் என் புராணத்தை முடிக்கிறேன் உங்களுக்கும் இது போன்ற நிகழ்வு இருந்தால் பகிரலாம்.பொறுமையுடன் வாசித்தமைக்கு நன்றி …எங்க அந்த நண்பர் இந்த நியாபகங்களை ஆரம்பித்தவரு அவருக்கும் நன்றி ( ஆனா  பயத்த மறுபடி கெளப்பி விட்டுட்டாரே…)

நன்றிகளுடன்,

தோழி

Advertisements

நன்றி மெசேஜ் ! – அடுத்த முதல் அடி …


என்னடா தங்லீஷ்ல எழுதுறேன் பாக்குறீங்களா நன்றிகள் கூற மொழி தடையல்ல என்பது என் கருத்து !

இத்தளம் இன்றுடன் பிறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது .  உருப்புடியா எழுதுனேனா தெரில ஆனா ஊக்குவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றி . முக்கியமா  நண்பர்களான தமிழ் , ஓஜஸ் ,குழலினிஅவர்களுக்கு என் முதல் நன்றி . என்னாலையும் எழுத முடியும் என்ற கருத்தை எனக்குள் துளிர்விட காரணமாய் இருந்தவர்கள் அவர்களே ! நன்றி நண்பர்களே . மேலும் இத்தளத்தில் நிரம்ப எழுத ஆயுத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டும் இருக்கிறது .இத்தளத்தின் மூலம் ரஞ்சனி மாமி அவர்களில் நட்பு கிட்டியது மகிழிச்சியே..இன்னும் நிறையா நண்பர்கள் கிடைத்துள்ளனர் , அதில் இவரும் ஒருவர் மூஷிவ்.

“AMSGGM”க்கான  பெயர் காரணம்

beautiful_raindrops-1600x900

தளத்தில் மொத்தம்

  • 37 பதிவுகள் ,இதனை தவிர்த்து.
  • 43 பிரிவுகள்.
  • 5 பக்கங்கள்.
  • இன்றுடன் 2000 பார்வைகளும் தாண்டிவிட்டது.

மேலும் மெசேஜ் தளத்தின் பிற பக்கங்கள் இதோ

மேலும் என் பிற தளத்தின் இணைப்புகள்

மிகவும் பிடித்த பதிவுகளாக…

மேலும் எழுதவே விருப்பம் …அனைத்து நல்உள்ளங்களுக்கும் என் நன்றி !
எனக்கு பிடித்த பாரதி கவியுடன் இரண்டாம் ஆண்டினுள் நுழைகிறேன்.

உறுதி வேண்டும் !

மனதில் உறுதி வேண்டும்,

வாக்கினி லேயினிமை வேண்டும்,

நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்,

கனவு மெய்ப்பட வேண்டும்,

கைவசமாவது விரைவில் வேண்டும்,

தனமும் இன்பமும் வேண்டும்,

தரணியிலே பெருமை வேண்டும்,

கண் திறந்திட வேண்டும்,

காரியத்தி லுறுதி வேண்டும்,

பெண் விடுதலை வேண்டும்,

பெரிய கடவும் காக்க வேண்டும்,

மண் பயனுற வேண்டும்,

வானகமிங்கு தென்பட வேண்டும்,

உண்மை நின்றிட வேண்டும்.

ஓம் ஓம் ஓம் ஓம்.

நன்றி மெசேஜுடன் …
உங்கள் தோழி.

beautiful_spring_flowers-wallpaper-2560x1440

புதிய உலகம் கண்டேன்


அமைதி  வணக்கம்,

நான்  தமிழில் பிழை இன்றி எழுதியதில்லை…இருப்பினும் கவனித்து எழுதுகிறேன் தவறு இருந்தால் பொறுத்தருள்க/சுட்டிக்காமிக்கலாம்.

எனக்கு ஊக்கம் அளித்த அன்பு நண்பர்களுக்கும் இருவரை குறிப்பிட்டே ஆகவேண்டும் “ஓஜஸ் , அழகியதமிழ்” அவர்களின் உதவிகளுக்கும் நன்றி கூறி ஆரம்பிக்கிறேன். தமிழில் நாட்டம் இருந்தும் பெரிதும் புத்தகம் படிக்க வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்னவோ இல்லை…இப்பொழுது நானே எனக்கான நேரம் ஒதுக்கி படிக்க ஆரம்பித்துள்ளேன் இதற்கு முழுமுதற் காரணம் என் நண்பர்களே என்று சொல்லுவேன் , எப்படி பட்ட புத்தகங்கள் படிக்கலாம் , எனக்கு ஏற்ற புத்தகங்கள் தேர்வு செய்வது எப்படி , சில ஆசிரியர்களின் புத்தகங்கள் எப்படி பட்ட கருத்துகள் உள்ளடங்கும் என்பதெல்லாம் அவர்களிடம் தான்  கற்க ஆரம்பித்து இருக்கிறேன் ..கற்க வேண்டும்.

images (4)நான் முதலில் படிக்க ஆரம்பித்தது என்னவோ சிறுகதைகள் தான் …. சில நேர தாமதத்தால் நான் புத்தகம் படிப்பதை சிறிது காலம் தொலைத்துவிட்டேன்(நிம்மதியும்). தற்போது அந்த நேரத்தை சேர்த்தார் போல் மிகவும் அதிக ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

பதிவின் கருத்துக்கு வருகிறேன் , நீண்ட நாளுக்கு பின் எனக்கான முதல் (ஆர்வத்துக்டன்) வாங்கி படித்த புத்தகம் கொஞ்சம் அறிவியல் கதை – என்.சொக்கன்” .இப்புத்தகுதுடன் என் சுவாரசிய படிப்பை துவங்கினேன். புத்தகம் வாங்கி ஆரம்பித்த ஒரே நாளில் முடித்தும் விட்டேன்..

அனைத்து கதைகளும் அன்றாடம் நம்மாள் உபயம் செய்யும் பொருட்களின் கண்டுபிடிப்பு கதைகள்.ஒவ்வொரு கதையின் பின்னணியிலும் ஆழ கருத்துகள் அமைந்து இருந்தது கண்டு வியந்தேன்.கதைகள் படிக்கையில் அக்கால கட்டத்துக்குள் போவது போன்றதோர் ஈர்ப்பும் கொண்டேன்.அனைத்து கதைகளும் குறும்பக்கங்கள் கொண்டது தான் ஆனால் எழுத்துக்கள் பரிமாறிய விதம் சற்று அருமை என்றே சொல்லுவேன் .

கதையின் தொடக்கம் முதல் முடிவு வரை சற்றும் சலிக்காமல் நகர்ந்ததும், என் ஆர்வத்தை கூட்டியதற்கும் ஆசிரியருக்கு என் அன்பு நன்றி.இத்துடன் அடுத்த புத்தகம் ஆரம்பிக்க ஆர்வத்துடன் நண்பர்களை அணுகினேன் உதவிக்காக…உதவியும் கிடைத்தது.என் ஆர்வமும் அதிகரித்தது.

கலீல் கிப்ரான் அவர்களால் எழுதி தமிழில் – என்.சொக்கன் அவர்கள் தழுவியுள்ள புத்தகம் பெயர் “மிட்டாய் கதைகள்”, அதற்க்கு ஏற்ப கதைகளும் இனிப்பாகவும் மிட்டாய் போன்று சிறியதாகவும் அமைய பெற்றுள்ளது.50 கதைகளை உள்ளடக்கிய புத்தகம் என்றாலும் பல சின்ன சின்ன சுவாரசியமான கருத்துக்களை உள்ளடங்கியது.

ஒவ்வொரு கதையின் துவக்கத்திலும் புதிதாக பிறப்பது போன்று புது ஆரம்பம் புதிய சுவாரசியம். சின்ன சின்ன கதைகள் என்றாலும் மனதை கொள்ளையடிக்கும் கதைகள் பல, சிறு உதாரணமாக பனித்துளியின் அழகு கற்பனை எழில் (உலகம்) சொல்ல வார்த்தைகளும் இல்லை.

” புத்தகங்கள் படிக்க

தனி உலகம் நுழைய

அமைதியின் தென்றலும்

இனிமையின் கீதமாக

எழுத்துக்களை சுவாசிக்கலாம் ! “

மேலும் இது போன்ற பதிவுகள் வர வாய்ப்பும் இருக்கிறது என்று கூறிகொள்கிறேன் . என் நண்பர்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன் .

புத்தக ஆர்வத்துடன்,

தோழி

images (1)

குறுந்தொகுப்பு…! ! ! !


இப்பதிவினை தமிழில் வழங்க எனது நீண்டநாள் விருப்பமும்கூட…
இப்பதிவில் நான் எழுதிய குறுந்தொகுப்புளை இட ஆசைப்படுகிறேன்…

அன்னை- இறைவன் எல்லா இடங்களிலும் இருப்பதாய் உள்ள சாட்சி…

இன்று நானாக இருக்க,

உந்தன் உயிரான உதிரத்தை.

அன்று அமிர்தமாக  தந்தாய் – நீ ! ! !

உந்தன் அன்பான உணர்ச்சிகளை

என்றும் ஆசியாய் பொழிந்து – நீ ! ! !

எந்தன் வாழ்வினை வடிவமைக்கும்

உளியாய்

அன்றும்,இன்றும்,என்றென்றும் இனியும்

இருந்தமைக்கும்

என் அன்னையாக வந்தமைக்கும்

தலைவணங்குகிறேன்.

imagesmom

—————————————————————————————————————————-

நண்பர்கள் – இறைவனின் படைப்பில் இன்றியமையா உறவு…

பல உயிராய் நடமாடும்

ஓர்உருவமாய்

என்னை மாற்றிய கடவுளுக்கு

நன்றிகள் கோடி…

Friendship-Day-2012-Wallpapers-FunRocker.Com-15

                 —————————————————————————————————————————-

அவள் மனம் காதலை கொண்டு இருக்கும் போது

மனம் உன்னை தேட

நீ

எங்கும் இல்லாமல்…

விழிகள் உன்னை

காண ! ! ! !

புன்னகை என்னை

அறியாமல் எழ! ! ! !

கண்கள் கலங்க

காத்திருப்பேன்

நீ

என் அன்பை உணரும் வரை….

imagesg

                               —————————————————————————————————————-

அவனின் இரகசிய உணர்வு…

அவள் கண்கள் என்னை கண்டும் காணவில்லை

என்னால் உணரமுடிந்தது !

அவள் மனம்  என்னைச் சுற்றுவது

என்னால் அதை  உணரமுடிந்தது !

அவள்  கண்கள் தேடித்துடித்தது,

தென்றலின் மென்மைஉணரமுடிந்தது

அவளின் மனம் இன்னும் உணரமுடியவில்லை…

sadboy

                        ——————————————————————————————————————————————–

அவள் – அவன் மனதில்

தமிழின் அழகாய்

செவியின் பாடலாய் : : மலரின் மனமாய்

விதையின் துணிச்சலாய்

உலகின் இயற்கையாய் : : சிகரத்தின் நுணியாய்

அமிர்தத்தின் இனிமையாய்

அழ்க்கடலின் இரகசியமாய்

சூரியனின் கதிராய் : : மதியின் குளிராய்

விண்வெளியின் புவிஈர்ப்பாய்

குழந்தையின் மொழியாய் : : தென்றலின் மென்மையாய்

உயிரின் ஓவியமாய்

நேரத்தின் துடிப்பாய் : :குருதியின் அடர்த்தியாய்

ஓவியத்தின் பொருளாய்

நதியின் வளைவாய்

என்னுள் நீயாய்;

என்றும் உயிராய் : : காணும் கண்களாய்

நீ இருப்பாய்……………

        —————————————————————————————————————————————-

அன்பானவரின் பிரிவின் வெளிப்பாடு…

எக்கணம் உன்னை கண்டேன் !!!!

நினைவில் இல்லை…..

எக்கணம் உன்னை என்னுள் கொண்டேன் !!!!

மறக்கமுடியவில்லை….

இக்கணம் உன்னை கண்டேன் !!!!

என் கனவு விழிகளில்….

எக்கணமும் என் உயிராய் இருப்பாய் –

ஓர் உயிராய்…

எத்திசையும் உன் நினைவு கண்டேன் !!!!

என்னை அறியாமல்….

sad-angel-free-screensavers-777898

            ————————————————————————————————————————————–

உதவி – மனிதனின் மகத்தான செயல்…இறைவனின் ஆசியும் கூட….

உதவி புரிபவர்களுக்கு –

உதவியின்மையின் அருமை தெரியும்..

உதவுங்கள்..

நன்றி கூறுங்கள்….

helping-hands-8.17.12

         ———————————————————————————————————————————————

 தவறுகள் ..

வெற்றியின் படிகளாகவும்…

வெற்றிப்பாதையின் வழிகள் அறியவும்

புதிய கண்டுப்பிடிபின்

வித்தாகவும்…

வாழ்வின் திருப்பு

முனையாகவும்…

மாற்றத்தின் அடித்தளமாகவும்…

மனிதனின் உடன்வளர்ந்த ஒன்று.

always-make-new-mistakes1

இத்தொகுப்புகள்  சற்று போர் அடித்திருக்கும்  என்று எண்ணுகிறேன்…மென்மேலும் உங்கள் கருத்துகளை கூறுவீர்கள் என்று நான் நம்புகிறேன்..என் நண்பருக்கு மிக்க நன்றி கூற நான் கடமை பட்டு இருக்கிறேன்…

நன்றி நண்பரே…

மென்மேலும் கவனிக்க :http://mabig.wordpress.com/

Holidays (*_*)…………..


Holidays…..

The sweet days where we have leisure time.The things we do will also be very helpful in time of many works.I remember the days I went to my native, holding hands of my grand parents make some walk in mild sunrise and sunset along the roads  with small snails ,playing with it getting them frightened.Sweet days remember……… then the small things like flowers, leaves in our notebooks remember those days with cute things.images

Cute scribbles of our cute hand writings remember small pencils ,small fights ,small smiles,small cries…making playfull holidays will remember friends who were short time….Helping parents,making small things thought to be an achievable things with cute scouldings  remember those Holidays forever in our mind.

Just seeing back those days ,those little days friends ,little things of leaves, notebooks make us happy while in times of any resemblance of many situations.Lets those days be our thoughts….of cute joys…

CHILDB

Just by remembering your cute old little things see your childhood…have your holidays with a great pleasure with further more things to do.With this Holiday i Wish you all a VERY

HAPPY NEW YEAR…..with sweet memories.

STH10008