வாசிப்பு..

நண்பர்களுக்கு வணக்கம் ,

நீண்ட நாட்களுக்கு பின்பான சந்திப்பு , இப்பதிவில் நான் படித்த இரண்டு புத்தகங்கள் பற்றி பதிய விருபுகிறேன். இரண்டு புத்தகங்களும் நண்பர்கள் ஊக்குவிக்க படித்தமையே ! நண்பர்களுக்கு என் நன்றிகள்.

முதல் புத்தகம் கல்கி அவர்கள் எழுதிய “சிவகாமியின் சபதம்” நடை வேகமாக இருந்தாலும், என் தாமதத்தினால் மெதுவாகவே படித்து முடித்தேன் . படிக்க படிக்க வேகாமாக நகரும் நடை கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்த விதம், காட்சிகள் உருவமைத்த விதம் அனைத்துமே அருமை மீண்டும் படித்திட தூண்டவும் செய்கிறது, படிக்கவும் ஆரம்பித்து விட்டேன். அனைத்து மனித உணர்வுகளையும் எழுத்தில் வடிவமைப்பதும் கலையே அதை வெகு அழகாக செய்துள்ளார். மேலும் ஒவ்வொரு அத்தியாயம் படிக்க படிக்க இன்னும் ஒன்று இன்னும் ஒன்று என்று படிக்க தூண்டும் வகையில் நிறையா திருப்பங்கள் அமைந்து இருக்கிறது. இந்நாவலை படிக்க உதவிய நண்பருக்கு நன்றி ,காலம் நீடித்தமைக்கு பொறுத்தருளவும். இப்புத்தகம் பற்றியும் கல்கி அவர்கள் பற்றியும் நிரம்ப பதிய ஆசை தான் இருப்பினும் பொறுத்தருளவும்.

புத்தகம்    : சிவகாமியின் சபதம்SS
ஆசிரியர்   : ரா. கிருஷ்ணமூர்த்தி (எ) கல்கி
பதிப்பகம்  : வானதி பதிப்பகம்

சிவகாமியின் சபதம் நாவலின்  மின் சுட்டி படிக்க….

பாகம் 1 – பூகம்பம்

பாகம் 2 – காஞ்சி முற்றுகை

பாகம் 3 – பிக்ஷுவின் காதல்

பாகம் 4 – சிதைந்த கனவு

இரண்டாம் புத்தகம் “ தோட்டியின் மகன் ” ,தகழி சிவசங்கரப்பிள்ளை அவர்கள் எழுதி தமிழில் சுந்திர ராமசாமி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நாவல் படிக்க மூன்று நான்கு நாட்கள் ஆயினும் இதன் தாக்கம் என்னுள் அதிகமே என்றேக் கூறலாம் . தோட்டியானவர்களின் வாழ்க்கை விதத்தையும் அவர்கள் உணர்வும், நம் உணர்வுகள் போன்று தான் என்றும் ஆசிரியர் நாயமா ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பதிந்து இருக்கிறார். அவர்களுக்குள் ஏற்ப்படும் விருப்பு அன்பு, சண்டை, வருத்தம் முதலான அனைத்து மனித உணர்வுகளையும் அருமையாக பதிந்திருக்கிறார். மேலும் ஒரு தோட்டியினால் மற்ற மனிதர் போல் வாழவும் முடியும் என்றும் & ஒன்று பட்டால் நலமாக வாழலாம் போன்ற ஆழமான கருத்துகளும் உள்ளடக்கியுள்ளார்.

கதையை சிறுது பார்க்கலாம், ஆரம்பத்தில் ஒரு தந்தை (இசக்கி முத்து) தன் மகனை(சுடலை முத்து) தோட்டி வேலைக்கு அனுப்பும் விதமும் நடக்கம் சம்பாஷனையும் கொஞ்சம் மனதை குழையச்செய்யும் அளவுக்கு அமைந்து இருக்கிறது. சுடலை முத்து  தன் பிள்ளைக்காக எதிர்காலம் வகுக்கும் செயல்களும் அதற்கு அவன் செய்யும் செயல்களும் காட்சியமைக்கப்பட்டுள்ளது. ஒரு தந்தை தன் மகனை தோட்டியாக ஆக்கக் கூடாது என்பதும் அதற்காக அவன் படும் வேதனைகளையும் உருகும் அளவிற்கு அமைக்கப் பெற்றுள்ளது . தாயின் மனநிலையை அவள் தன் பிள்ளையிடம் பிள்ளைக்காக வருந்தும் உருகும் ஒவ்வொரு நிகழ்வும் பதிந்த விதம் அருமை. படிக்க வரிகள் மிகவும் விறுவிருப்பாகவும் பல இடங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய விதமும் அதற்கான சம்பாஷனைகளும் நம்மையும் உணர்ச்சிவசப்படுத்துகிறது.

“தோட்டிக்கு மவனில்லையா? சொல்லிக்கொடுத்தா தலேலெ ஏறாதுன்னு சொல்லி அடிச்சாரம்மா.”

இப்படி தன் தாயாரிடம் அழுதுகொண்டே சில கேள்விகள் கேட்க அந்த பிஞ்சின் உணர்வுகளையும் பல இடங்களில் ஆழமாக பதிகிறார் படிப்பவர் மனதில்.

ஒரு தம்பதியினர் தங்கள் சங்கதிகளுக்காக தங்கள் வாழ்வையே வடிவைத்து பல கட்டுபாட்டிற்கு தங்களையே அடைத்துக்கொள்கிறார்கள். அவர்களும் (தோட்டிகளும் ) மனிதர்களே என்று புரிந்துகொள்ளும் காலம் வந்து விட்டது. ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை நயம்பட பதிந்து இருக்கிறார். சூழல்களுக்கு ஏற்ப  மாறும் மனிதர்களின் மனநிலைகளையும் ஆசிரியர் பதிந்து இருக்கிறார்.

Tm

                        புத்தகம் பெயர்   : தோட்டியின் மகன்
ஆசிரியர்                : தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில்                  : சுந்திர ராமசாமி
விலை                   : ரூ.130/-
பதிப்பகம்             : காலச்சுவடு

இந்த இரு புக்ககங்களும் வாசிக்க ஊக்குவித்த நண்பர்களுக்கு என் நன்றிகள். தாமத்திற்கு பொறுத்தருளவும்.மேலும் “தோட்டியின் மகன் ” புத்தகம் பற்றி  படிக்க

நண்பர் தமிழின் பதிவுகள்

நண்பர் ஓஜஸ் அவர்களின் பதிவு நாற்சந்தி கூவல்

பொறுமையாக படித்தமைக்கு நன்றி .மீண்டும் சந்திக்கலாம் இன்னும் சில புத்தகங்களுடன் .

Advertisements

8 thoughts on “வாசிப்பு..

  1. வாசிப்பு அனுபவங்கள் உங்களிடமிருந்தும் வரத் துவங்கியது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
    சின்னச் சின்னப் பிழைகளைத் தவிர்க்கப் பாருங்கள்.

    இதே ஆசிரியரின் படைப்புகளாக,
    பார்த்திபன் கனவையும், செம்மீனையும் நான் அடுத்து படிக்க உத்தேசம். உங்களுக்கும் அவற்றையே பரிந்துரைக்கிறேன்.

    இந்நேரத்தில் எனக்கு சிவகாமியின் சபதம் படிக்க உதவிய தோழர்களுக்கு நன்றியையும் சொல்லிக்கொள்கிறேன்.

    வாசிப்பு உங்கள் வாழ்க்கையையும் வளமாக்கட்டும்!

    • மிக்க நன்றி தமிழ் .பிழைகளை திருத்திக்கொள்கிறேன். மேலும் படிக்க புத்தகங்கள் பரிந்துரை செய்ததற்கு மிகவும் நன்றி 🙂

  2. உங்களால் இன்னும் விரிவாக எழுத முடியும் என்றே தோன்றுகிறது. இன்னும் இன்னும் அனுபவங்களை பதிவு செயுங்கள். மேலும் தொடரவும். வாழ்த்துக்கள்.

    என்னை என்றும், இன்றும் படிக்க தூண்டும் என் தம்பிக்கு நன்றி பல. இந்த இரண்டு புத்தங்களையும், அவானால் தான் வாசித்தேன்.

    • நன்றி ஓஜஸ் ….இன்னும் அனுபவங்கள் பதிய ஆவலுடன் இருக்கிறேன் . நன்றி தமிழ் நண்பருக்கும் 🙂

  3. சிவகாமியின் சபதம் நான் முதல் முதலில் படித்த நாவல். வெகு காலமாகிவிட்டது. ஒரே புத்தகத்தைப் பற்றி பலரும் எழுதுகிறோம். என்றாலும், உங்களைக் கவர்ந்த, உங்களிடம் பாதிப்பு ஏற்படுத்திய பகுதிகளையும் தொகுத்து வழங்குங்கள். தோட்டி நூலுக்குச் செய்திருக்கிறீர்கள். தொடருங்கள். நன்றி.

    • கண்டிப்பாக எழுதுகிறேன் சிவகாமியின் சபதம் புதினம் பற்றி… நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s