பிம்பமாய் இருள் – வெளிச்சம்

நண்பர்களுக்கு வணக்கம்,

என்னடா தலைப்பே ஒரு மாறி இருக்கு பாக்குறீங்களா அப்படித்தாங்க நான் சொல்ல போகும் கதை இருளில் ஒளிந்த சில வெளிச்சம்வரா கதை. நண்பர் ஒருவரால் ஒரு கதை படிக்க நேரிட்டது  “காஞ்சனை” கதை.அதன் தாக்கமோ இப்பதிவு எழுத தூண்டிட்டது.

எனக்கோ எந்த கதை கதாபாத்திரம் படித்தாலோ அந்த கொஞ்ச நாளுக்கு நினச்சுட்டே இருக்க தோணும். இந்த கதையைப் படித்ததும் என் பழைய நியாபகங்கள் வர ஆரம்பித்தது.ஒன்னும் இல்லங்க பேய் பட பாக்குற எபெக்ட்டுல இருக்கும் சொல்றேன் ….ஆனா மொக்கையா இருந்தா திட்டாதீங்க.முழுவதும் உண்மை கற்பனை இல்லை இப்பவே சொல்லிடுறேன்.

இரவு நேரங்களில் படிக்கிற பழக்கம் இருக்கும் சுமார் இரண்டு மணி வரை அளவும் படிப்பேன். (இப்போ இல்ல! ). நான் தங்கி இருந்த விடுதி சற்று காட்டிற்குள் இருப்பது போன்று அமைப்பு இருக்கும். விடுதி என்னமோ சுடுகாட்ட மாத்தி கட்டிருக்காங்கனு ஒரு கட்டுக்கத வேற அப்போ இருந்தது. எனக்கோ கடவுள் நம்பிக்கை உண்டு அதைவிட இருட்டு பயம் அதிகம் ( பலருக்கும் இருக்கும் ஆனா வெளிய காமிச்சுக்க மாட்டாங்க,எனக்கு பயம் உண்டு)(சு…சு சொல்லிடாதீங்க ! ).அதுனாலையே என்ன இருட்டா இருந்தாலும் யாருடைய உதவியோட தான் போவேன் வருவேன். விடுதியில் இருந்ததால் ஆட்கள் எப்பவும் இருப்பாங்க ஆனா ஒரு சில நிகழ்வுகள் என்னை ரொம்ப ஸ்தம்பிக்க வைத்தது.

இரவு வேளைகளில் படிகின்ற நேரம் அல்லவா கொஞ்சம் பிஸியாவே படிப்பேன் மணி பார்கவும் மாட்டேன்,  மணி கரெக்டா பன்னிரெண்டு என்ற வாக்கில் எங்கள் விடுதி பக்கம் இருக்கும் அனைத்து நாய்களும் அழுவது போல சத்தம் கேட்கும் முதல் கொஞ்ச நாள் அவ்ளோ பயம் தெரியல .நாட்கள் செல்ல செல்ல நாய்களில் எண்ணிக்கையும் அதிகம் ஆனது, அவைகளின் அழும்சத்தமும் அதிகமானது, கூடவே டெவில் சவுண்ட் எபெக்ட் வேற ( காத்த சொன்னேன் ). இதெல்லாம் பரவா இல்லன்னு பாத்தா கட்டுகதை கொடூரமா போச்சு, விடுதி அருகில் ஓர் குளம் இருக்கிறது .எங்கள் விடுதியில் இருந்து பார்த்தா அந்த குளம் தெரியும்.அந்த குளத்தில் யாரோ ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும். அவருடையநினைவுகள் இங்கயே இருப்பதாகவும் சொன்னார்கள் பலர் ( உண்மையோ / பொய்யோ ஆனா நம்ப வச்சுடாங்க , மீ பாவம் )

scary 1

அதன் பொருட்டு பலசமையங்களில் ( இரவு வேளைகளில் ) விடுதி வழி (வராண்டா) நெடுக “ஓ” என்பார் போன்று ஆள்நடமாட்டம் இன்றி இருக்கும் ,பலர் கொலுசொலி கேட்டதாகவும் சொல்லியுள்ளனர். நான் நம்ப தயங்கினேன் ஆனா அதையும் நம்பும் வகையில் ஓர் நாள் இரவு ஒரு நிகழ்வு நடந்தது,

எப்பொழுதும் போல படித்துகொண்டிருந்த நான் சற்று காற்றாடஇருக்கலாம் என வராண்டா வந்தேன் அச்சமையம் அறைகள் பெரும்பாளானவை பூட்டப்பட்டு இருந்தது நியாபகம் மேலும் விடுதி பாதி காலியாக இருந்தது. சற்று நேரம் எப்.எம் கேட்டபடி அமர்ந்து இருந்தேன் ,அந்த இசையையும் மீறி எனக்கு கொலுசொலி கேட்டது சற்று சுற்றி பார்த்தேன் ஆட்கள் யாரும் இல்லை மேலும் என்னை தவிர்த்து என்னுடன் இருந்த மற்றொருவரும் அதே போன்று ஒலி கேட்டாதாக எனக்கு சொன்னார், பயம் சற்று வர ஆரம்பித்தது மேலும் அதே வேளை (நன்றாக நினைவுள்ளது) எங்கள் விடுதி அறைக்கு அருகில் மூன்று நான்கு நாய்கள் சத்தமாக அழும் குரல் போன்று ஓசை எழுப்பியது

இத்துடன் ஆந்தை சத்தம் வேறு எங்களை பயத்தின் உச்சிக்கு ஏற்ற இன்னும் ஒரு சத்தமாக கதவுகள் சாத்தும் சத்தம் (காற்றினாலே தான்) உஸ்ஸ்ஸ்…. ஒரே ஓட்டமாக அறைக்கு சென்று படுத்தது தான் நியாபகம் தூக்கம் வராமல் அந்த விலங்குகளின் சத்தம் ஒலித்துக்கொண்டே இருந்தது ( அப்படியே அலுப்பு தெரியாமல் தூங்கியும் விட்டேன் ) . காலையில் எழும்ப அதிக நேரம் ஆய்டுத்து எழும்பி விசாரித்தப் பொழுது விலங்குகள் சத்தம் பெரும்பாலானோருக்கு கேட்டதாகவும் நிறைய நேரம் (கிட்ட தட்ட மூன்று நான்கு மணி நேரம் ) கேட்டதாகவும் அறிந்து கொண்டேன். அந்த நாளில் இருந்து தான் எனக்குள்ளான பயம் ரொம்ப அதிகம் ஆனது தினம் இரவு மணி 12 என்ற வாக்கில் விலங்குகள் அழும் சத்தம் கேட்க ஆரம்பிக்கும் மேலும் பல மணிநேரம் தொடரும் காதுகள் மூடி படுத்தும் கேட்டு கொண்டே இருக்கும் பயத்தில் பல நேரம் அழுவதும் உண்டு காரணமே இல்லாமல் ( ஏன், எதற்கு என்று இன்றும் தெரியவில்லை )

அமானுஷ்யம் உள்ளதா இருக்கிறதா என்று தெரியாது ஆனால் சில சம்பவங்கள் அது இருப்பதாகவே நம்மை நம்ப scary 2வைக்கிறது. மேலும் இரு நிகழ்வை இங்கு பதிவு செய்கிறேன். நானும் என் தோழியும் என் அறையில் (மதிய வேளையில்) படித்து சற்று கண் அயர்ந்தோம் நானோ உண்ட மயக்கம் போன்று நன்றாக உறங்கிவிட்டேன். என் தோழியோ சற்று நிம்மதி இன்றி முழு நிலை தூக்கம் இன்றி இருந்தார், ஒரு அரை மணி நேரம் இருக்கும் தூங்க ஆரம்பித்து என் தோழிக்கோ யாரோ தன்னை தள்ளுவதாகவும் அவர் என்னை உதவிக்கு அழைக்க சத்தம் போடுவதாகவும் ஆனால் அவரால் என்னை கூப்பிடும் அளவிற்கும் சத்தம் எழுப்ப முடியாமல் தன்னை எதோ அமுக்குவதாகும் கூறினார். பதறிபோய் எழும்பவும் முடியாமல் திரும்பவும் முடியாமல் சற்று நேரம் மூச்சு விட கஷ்ட்ட பட்டு பின் இயல்பு நிலை அடைந்ததாக கூறினார். இந்த நிகழ்வு அவர் கூறி தான் எனக்கு தெரியும் ( “நல்ல கும்பகர்ணன் போல தூங்குனனு தெரிது” என்று உங்கள் குரல் கேக்குது )

இது போன்ற சம்பவங்கள் பலருக்கு நடந்து இருப்பதகாக இதனை மற்றவர்களிடம் பகிர்ந்த பின் தெரிந்து கொண்டேன்.இது போன்றே என் நண்பர் படித்து கொண்டு இருக்கும் பொழுது தன் மேல் எதோ ஓர் அழுத்தம் யாரோ செய்வதாகவும் மேலும் கழுத்தை அமிக்கி கத்த விடாமல் செய்வதாகவும் கூறினார். இம்மாதிரியான பல நிகழ்வுகள் கேட்ட வண்ணம் என்னுள் பயம் அதிகமான வண்ணமே இருந்தது.

பல சமையங்களில் யோசித்ததுண்டு பகல் வேளைகளில் நம்முள் உள்ள துணிச்சல் இரவு வேளைகளில் எங்கு இருளுக்குள் ஒளிந்து விடுகிறதா என்று . இது எல்லாம் கற்பனை என்று மனம் ஒப்புகொள்ள முடியவில்லை ஆனால் நிஜம் என்றும் ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை

பேய் இருக்கா இல்லையா தெரியாது ஆனா கடவுள் இருக்காரு. நன்மை உண்டெனில் தீமையும் இருக்கும் அது போலவே இதுவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.(யார் கண்டா…) . சரி இத்துடன் என் புராணத்தை முடிக்கிறேன் உங்களுக்கும் இது போன்ற நிகழ்வு இருந்தால் பகிரலாம்.பொறுமையுடன் வாசித்தமைக்கு நன்றி …எங்க அந்த நண்பர் இந்த நியாபகங்களை ஆரம்பித்தவரு அவருக்கும் நன்றி ( ஆனா  பயத்த மறுபடி கெளப்பி விட்டுட்டாரே…)

நன்றிகளுடன்,

தோழி

Advertisements

8 thoughts on “பிம்பமாய் இருள் – வெளிச்சம்

 1. வாழ்த்துகள்.

  எதிர்பார்ப்புகள் அத்தனையையும் நொறுக்கி எழுதியிருக்கிறீர்கள். எ.பிகள் இருப்பினும், படிக்க ஏதுவாக, வேகமாக இருக்கிறது.

  கதையில்
  சில இடங்கள் வழக்கமானவை. பல இடங்கள் எனக்குப் பழக்கமானவை!
  என்ன ஒரு குறையென்றால், நல்ல சிறுகதைக்கான கரு சிதைந்த நிலையில் பதிவாகியிருப்பதாக எனக்குப் படுகிறது.

  நானும் நிறைய தரவுகள் வைத்திருக்கிறேன். அடுத்த ஆண்டு கண்டிப்பாக இதே genre-ல் நானும் ஒரு கதை எழுதியிருப்பேன். அதில் இப்பதிவின் தாக்கமும் இருக்கும்.

  முன்கூட்டியே நன்றிகள்…

  காஞ்சனையை உங்களைப் படிக்க வைத்த நண்பர், எக்கசக்கசக்கமான பாராட்டுதலுக்கு உரியவராவார்…. 😉

  • நன்றி தமிழ் பிழைகள் வராதபடி கவனித்து கொள்கிறேன்.நிகழ்ந்த நிகழ்வையே பதிவு செய்தேன் தமிழ்.

   //நானும் நிறைய தரவுகள் வைத்திருக்கிறேன். அடுத்த ஆண்டு கண்டிப்பாக இதே genre-ல் நானும் ஒரு கதை எழுதியிருப்பேன். அதில் இப்பதிவின் தாக்கமும் இருக்கும்.//
   மிக்க மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள் வரப்போகும் கதைக்காக…காத்திருக்கிறேன் 🙂

   மீண்டும் நன்றி தமிழ்

 2. வணக்கம்

  சிறுகதையை படிக்கும் போது என் மனதிலும் ஒரு அச்ச உணர்வு தோன்றியது…. அருமையாக எழுதியுள்ளிர்கள் மேலும் பல பதிவுகள் வெளிவர எனது வாழ்த்துக்கள்……

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  • தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி,நன்றி
   மேலும் எழுத முயற்சிக்கிறேன் 🙂

 3. ஆரம்பமே வெகு ஜோர் வாழ்த்துக்கள் நிறைய எழுத என் வாழ்த்துக்கள் வளர்க உங்கள் எழுத்துப்பணி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s