நாம் சிரிக்கும் நாளே திருநாள் :-)

சின்ன சின்ன சிரிப்பு, சீனி மாத்தாப்பு சிரிப்பு !
மின்னும் வண்ண சிரிப்பு, முகத்தில் மலரும் சிரிப்பு !

மழலை கொண்ட சிரிப்பு, இறைவன் கொண்ட உருவம் !
மழைத் தூரலின் சிரிப்பு, புவியின் புனித கருவம் !
தென்றலின் மென்மை சிரிப்பு, மனதை நனைக்கும் ஈரம் !
மொட்டின் மலர்ந்த சிரிப்பு, மெட்டின் அழகு தீரம் !

அன்னையின் அன்பு சிரிப்பு, அமைதி அணைப்பு அருமை !
மலரின் மெல்லிய சிரிப்பு, மனதின் மயங்கு குளுமை !

தந்தை கொண்ட சிரிப்பு, நம்பிக்கை நம்மை ஏற்றும் !
நம்பிக்கை கொண்ட சிரிப்பு, நல்லது நடக்கும் மாற்றம் !
அனல் ஆணவச் சிரிப்பு, தம்வீரம் அழிவின் அசதி !
கர்வம் கூடா சிரிப்பு, கம்பீரம் கொஞ்சும் அலாதி !

மலர்போல் சிரிப்போம், வானவில்லாக ஓவியமாவோம்…
வஞ்சம் இல்லாமல் சிரிப்போம், மத்தாப்பாக வண்ணம் பூப்போம்…
சிரிப்பின் சின்ன பூக்கள், முகத்தின் பூந்தோட்டமே !

திங்கள் தோறும் திருநாள்
புன்னகைக் கொண்ட பெருநாள்
நகைப்பின் அணியணிந்து
நயமுடன் பணிவோம் !
நலமுடன் வாழ்வோம் !

சிரிப்பு - மருந்து :-)

சிரிப்பு – மருந்து 🙂

Advertisements

9 thoughts on “நாம் சிரிக்கும் நாளே திருநாள் :-)

 1. வணக்கம்

  தங்களின் மின்னஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்….
  —————————————————————————————————————
  கவிதை அருமையாக உள்ளது போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்…
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-
  ————————————————22/10/2013.———————————————–

 2. சிரிப்பின் வேறு வேறு பரிமாணங்களைக் காட்டிய கவிதை நன்றாக இருந்தது.
  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

 3. Pingback: வெள்ளி விருந்து #2 | நாற்சந்தி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s