பயணத்தில் பயணங்கள். – 1

வணக்கம் நண்பர்களே ,

 

ஒரு ரயில் பயணத்தில் ஆரம்பமான இப்பதிவு, என் மனதில் பல எண்ணங்களை ரயில் பெட்டிகளாக இணைத்து ஓடவிட்டது. பூக்களுக்காக திரியும் வண்டுகள் போன்று ஜனங்கள் ரயில் நிலையத்தில் மொய்த்த வண்ணம் இருந்தனர். ஒவ்வொரு ரயிலும் வந்தும் போதும், ஒரு கூட்டம் வெளியேறவும், ரயிலுக்காக இன்னொரு கூட்டம் அலைமோதும் வண்ண திருவிழா போன்று காட்சியளித்தது .

 

என் பயணத்திற்கு வருகிறேன், பாம்பு போன்ற வரிசையில் நின்று அரைமணி நேரம் கழித்து என் பயணச்சீட்டு பெற்று என் ரயிலுக்கு உரியதான ப்ளாட்பாஃம்க்குச் சென்றேன், ரயிலிலும் ஏறினேன். எதிர் எதிரான இருக்கைகள்,எதோ எதிரும் புதிருமாய் இருக்கும் பல்வரிசைப் போல. மாலை வேளை என்பதாலும் ,விடுமுறை என்பதாலும் கூட்டம் அதிமாகவே இருந்தது , கல்லூரி மாணவர்கள் அதிகம் காணப்பட்டனர்.

 

எப்படியோ ஒரு குடும்பம் (பெற்றோர்,சிறுமி,சிறுவனுடன்) என 4 பேருடன் அமர்ந்தேன். அச்சிறுவர்கள் எப்படியும் ஆறாம் வகுப்பிற்குள் தான் என்று யூகித்தேன். அச்சிறுவர்களின் அன்னையோ நீண்ட நாள் பழகியது போன்று முதலில் பேச்சுக்கொடுத்தார், கொஞ்சம் தயக்கத்துடனே என் உரையாடல் ஆரம்பித்தது. பின் கொஞ்ச நேரம் வேடிக்கையுடன்.

 

“டீ,காபி” என்ற சத்தத்துடன் ரயில் நிலையம் முழுவதும்(முடிந்த வரை) வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தேன் . ஆட்களும் வந்து போய் கொண்டு இருந்தனர் இருக்கையின், இடிப்பாட்டிர்குள்.அச்சிறுவர்களை அவர்கள் அன்னை ஸ்னாக்ஸ் சாப்பிடும்படி கூறினார் சமத்தாக இருவரும் சப்பணங்கால் போட்டுக்கொண்டு அமர்ந்தனர், [அதன் பின் தான் என் எண்ணங்களும் மாற தொடங்கின ].  சிறுவனை விட, சிறுமி சின்னவள். ஆனால் இருவருமே கண்ணாடி அணிந்து இருந்தனர்.சிறுமி தன் இடது கையால் ஸ்பூன் கொண்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்தால் எனக்கோ ஆச்சரியம் பெரும்பாலான குழந்தைகள் இடது கை பழக்கம் இருக்குமெனில் பெற்றோர்கள் பயந்து வலது கையை பயன்படுத்தச்சொல்லி வர்ப்புருத்துவர் ஆனால் அப்பெற்றோரோ அப்படி இல்லை.

 

நான்: என் ஆச்சிரியத்தில் வினாவியும் விட்டேன் “அவள் இடது கையிலும் எழுதுவாளா? ”என்று.
அவள் அன்னையோ பொறுமையுடன் “ஆமாடா, குழந்தையிலேயே பழக்கம் இருந்துச்சு,நாங்க மாத்துனா அவள் கடினப்படுவாள் என்று மாத்தளடா” என்றார்.

 

நான்: “சிறு வயத்தில் இருந்தை மாற்றாமல் இருப்பது நல்லது,நால்லா படிப்பாளா ? ”என்றேன்.
அவள் அன்னை “ரொம்ப நல்லா படிப்பாடா ”என்றார்.
இத்துடன் உரையாடல் முடித்துக்கொண்டு என் மன எண்ணங்களை தட்டி எழுப்பிவிட்டுட்டேன்.

 

பெரும்பாலான அறிஞர்கள் இடது கை பழக்கம் உள்ளவர்கள் என்று அவ்வறிஞர்களின் பெயர்கள் நியாபம் படுத்த முடிகிறதா என்று நீண்ட சிந்தனையில் உட்காந்து விட்டேன்நான் சிந்தித்ததில் சில துளிகள்

 

இடது கை பழக்கம் இருப்பவர்கள் எனக்கு தெரிந்தவர்கள்.
  • காந்திஜி
  • பாரக் ஒபாமா
  • இன்னும் பலர்
 
பெரும்பாலும் இடதுகை பழக்கம் இருப்பவர்கள்

  • சற்று கற்பனைச் சினந்தனை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • எதையும் புதிய வடிவில் காணும் நோக்கத்துடன் பார்ப்பார்கள்.
  • கூர்ந்து கவனித்து எளிதில் பிரச்சனைகள் தீர்க்கும் வழிகள் கண்டுபிடிப்பர்.
  • தங்கள் செயலில் முழு ஆர்வத்துடனும் துள்ளியமாகவும் முடிக்க எண்ணுவர்,செய்வர்.

 

சற்று சிந்தனைகள் ஓய்ந்தன .சிறுவன் அவனது வீட்டுப்பாடங்களை படித்துக்கொண்டு இருந்தான் . 1௦ நிமிடத்தில் கம்பாட்மென்ட் நிரம்பி விட்டது .அமைதி நிலை பரவியது பிளாட்ஃபாமில் இருந்த மக்களின் சத்தம் மட்டும் ஓயாமல் இருந்தது.ரயில் புறப்படுமென அறிவிப்பு செய்யப்பட்டது ஐந்தே வினாடியில் மெல்ல ரயில் புறப்பட்டது.

 

என் பயணம் இசையுடனே இருக்கும். என்றும் போல் அன்றும் இசை கேட்க்க தயார் ஆனேன். ஒரு புத்தகத்துடன் என் வாசிப்பும் ஆரம்பித்தேன். ஜன்னல் இருக்கை நல்ல மென்மையான காற்று கூடவே வானத்தின் வண்ண ஜாலம் கண்டு கொண்டு இருந்தேன். அதை கண்டது என் எண்ணத்தில் கிறுக்கலாக

 

“வண்ணம் மேகங்களாய் தீட்ட

சூரியன் மேகத்திற்குள்

ஒளிந்துகொள்ளும் மாயம்

அதனின் வெட்கமோ !”

 

ரயில் அடுத்த ஸ்டேஷனில் நின்றது ,இன்னொரு ரயில் கடக்கும் வரை காக்க வேண்டி இருந்தது. அதனுடன் என் வாசிப்பும் விறு விருப்பாக சென்ற படி இமைகள் அயராது படித்து, பிடித்த வரிகளை திரும்ப திரும்ப மனதில் படித்து ரசித்துக்கொண்டு இருந்தேன்.இதற்கிடையில் ஹார்ன் சத்தத்துடன் அந்த ரயில் வேகமாய் கடந்து சென்றது. எங்கள் ரயிலும் புறப்பட்டது. என் புத்தக வரிகளிலும் சுவாரஸ்யம் புறப்பட்டது.

 

“மரங்கள் வீடுகள் பின் தள்ள நாங்கள் முன்னேறினோம்!”

பயணம்..

பயணம்..

மரங்கள் பின் போக என் மன அலைகள் (நினைவுகள்) என்னை பின் தள்ளின.இருள் படரப்படர கருமேகங்கள் சூழ் அந்த இருட்டில் மேகக்கூட்டங்கள் மழைத்துளிகள் கொண்டு இருந்ததையும் காண முடிந்தது.மெல்ல தூரலாக பூ பூத்தது. என் கைகளை ஜன்னல் வழியே விட்டேன், புல் நுனியின் பிறக்கும் துளிகள் போன்று என் கைகளில் துளிகளை ஏந்தினேன். சிறு பிள்ளை போல் விளையாடவும் செய்தேன்.

 

சற்று உள் கவனிக்கலாம் என்று என் வாசிப்பை தொடர்ந்தேன். என் வரிகள் துளிகள் போன்று அதிக குளிரையும் இன்பத்தையும் எனக்கு அளித்தது. என்ன புத்தகம் படித்து கொண்டு இருந்தேன் என்று இப்ப சொல்றேன் கல்கி அவர்களின் “சிவகாமியின் சபதம்”.

 

மழை என் கைகளை நனைக்க கல்கியின் அவர்களில் வரிகள் என் எண்ணங்களை நனைத்தது.இதோ மழையுடன் என் மனதை நனைத்த கல்கி வரிகள்
“செங்கனி வாயில் ஒரு
வேய்ங்குழல் கொண்டிசைத்து
தேனிசைதான் பொழிவோன்
யார் யார் யார்? கிளியே!
செந்தாமரை முகத்தில்
மந்தகாசம் புரிந்து
சிந்தை திரையாய்க் கொள்வோன்
யார் யார் யார்? கிளியே !”

 

“கண்ணன் என்றங்கேயொரு
கள்வன் உளன் என்று
கன்னியர் சொன்னதெல்லாம்
மெய்தானோ ?கிளியே!
 வெண்ணை திருடும்பிள்ளை
என்னுள்ளம் கவர்ந்ததென்ன?
கண்ணால் மொழிந்ததென்ன?
சொல்வாய் ! பைங்கிளியே !”

 

இருபத்தி இரண்டாம் அத்தியாயத்தில் மகேந்திர சக்கரவர்த்தியும் , குமார சக்கரவர்த்தியும் ஒரு கால்வாய் அருகில் உரையாடிக்கொண்டு இருக்கையில் பசுமை நிறைந்த சமவெளி அருகில் கால்வாயில் படகுகள் ஒன்றில் இருந்த படகோட்டி ஒருவன் தன் வேலையுடன் பாடிக்கொண்டு இருந்தான்.

 

நானோ மழை மேகங்கள் பூமி நனைக்க இவ்வரிகளை சற்று பொறுமையுடன் மனதிற்குள் திரும்ப திரும்ப ஒரு 5 தடவை படித்து(இசைத்து) நானே அவ்விடத்தில் இருப்பது போன்று கற்பனை உலகிற்கும் சென்று விட்டேன். பின் மேலும் முன்னேறி படித்துக் கொண்டு இருந்தேன் என் இசையுடன். அன்று ஒரு மூன்று மணிநேரத்தில் பதினைந்திற்கு மேல் (அத்தியாயம்) படித்து இருப்பேன். சற்று நேரம் படித்ததை நினைவுகளில் ஓடவிட வானங்கள் கண்டு அக்கதாப்பாத்திரத்திற்கு மேடைகள் அமைக்க என் கற்பனை நாடகமே நடத்தினேன்.

 

நான் படித்துக்கொண்டு இருப்பதைஅப்பெற்றோர்கள் கண்டு இருந்தனர். நான் சற்று சிந்தித்து கொண்டு இருந்த நேரம், அச்சிறுவர்களில் அன்னை என்னிடம் “என்ன புக் படிக்கிரடா?”என்றார்.

 

நான் முதலில் கவனிக்கவில்லை “கதாப்பாத்திரங்கள் நகர என் எண்ணங்கள் இருந்தன”. பலமாக என்னை கூப்பிட்டு கேட்டார். தட்டு தடுமாறி சிரிப்புடன்
“கல்கியின் –சிவகாமியின் சபதம் படிச்சுட்டு இருக்கேன் aunty” என்றேன்.

 

அச்சிறுவரின் தந்தை சற்று பூரிப்புடன் “எந்த அத்தியாயம் படிக்கிறாய்” என்று வினாவினார்.
நானும் பதில் அளித்து முதல் முறை படிப்பதாக கூறினேன்.(ஆம் நான் முதல் முறையாக தான் படித்துக் கொண்டு இருந்தேன் )

 

சிறுவனின்தந்தை “ரொம்ப விறுவிறுப்பாக இருக்கும் பொறுமையுடன் படி, அத்த கதாப்பாத்திரங்கள் உயிர் கொண்டு வருவதாகவே இருக்கும் – கல்கியின் நடை ”என்றார்.
நான் “மெல்ல சிரித்து ஆமா uncle ”என்றேன்.

 

சிறுவனின் தந்தை ”சரி படி”என்று கூறினார்…அவர் சொல்லும் அதே வேலையின் அச்சிறுவர்களின் அன்னையும் “ரொம்ப சுவாரசியாமாக இருக்கும் உயிரோட்டத்துடன் கொண்ட நடை”என்றார். இதனை கேட்டதும் எனக்கு இன்னும் அதிக ஆர்வமே வந்தது

 

ஆனால் என்ன செய்ய ? நான் இறங்க வேண்டிய நிலையம் வர இன்னும் 2 /3 நிலையங்கள் முன்னால் இருந்தேன். புத்தகத்தை மூட மனசில்லாமல் மூடிவிட்டு ரயில் கதவின் வாசலில் சற்று நேரம் தென்றல் சாரலுடன் எட்டி பார்த்தபடி வான மேக இருளின் ஜாலங்களை கண்டு கொண்டு இருந்தேன், கூடவே படித்த அனைத்து அத்தியாயத்தையும் மனதில் ரயில் போன்று நாடகமாகவே நடத்தினேன். ஒரே யோசனை “இவ்ளோ காலம் படிக்க தவறிவிட்டோமே” என்று சொல்லிக்கொண்டேன்.

 

நண்பர்கள் உதவியால் இப்போவாவது எனக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது என்று மகிழ்ச்சி கண்டு கொண்டேன். அவர்கள் எழுதிய பதிவுகளும் எனக்கு நியாபகம் வந்தது.நண்பர்களின் பதிவுகள்

 

இருளின் வெளிச்சமாக நிலாவும் இல்லை நட்ச்சத்திரங்களும் இல்லை. மனதில் பல எண்ண அலைகள் அடுத்து எப்பொழுது படிக்க முடிகிறதோ என்ற ஏக்கம் வந்தது. நான் இறங்கும் நிலையம் வந்தது என் பயணமும் முடிந்தது (ரயில் பயணம் மட்டுமே) எண்ணங்கள் பயணம் கல்கியின் வரிகளுடனே இருந்த வண்ணம் இரவும் கனவுகளும் விட வில்லை அங்கும் கல்கியின் கதாபாத்திரங்கள்.

 

ரொம்ப நீளமாக எழுதிவிட்டேன் .படிக்கச் சிரமப்பட்டு இருந்தால் பொறுத்தளுவும் இன்னும் ஒரு பயணம் இருக்கிறது அந்த பயணம் இத்துடன் தொடர்பு உடையதே அதனை அடுத்தப் பதிவில் பகிறுகிறேன்.

 

நன்றி,
பொறுமையுடன் படித்தமைக்கு.

Leave a comment