புதிய உலகம் கண்டேன்

அமைதி  வணக்கம்,

நான்  தமிழில் பிழை இன்றி எழுதியதில்லை…இருப்பினும் கவனித்து எழுதுகிறேன் தவறு இருந்தால் பொறுத்தருள்க/சுட்டிக்காமிக்கலாம்.

எனக்கு ஊக்கம் அளித்த அன்பு நண்பர்களுக்கும் இருவரை குறிப்பிட்டே ஆகவேண்டும் “ஓஜஸ் , அழகியதமிழ்” அவர்களின் உதவிகளுக்கும் நன்றி கூறி ஆரம்பிக்கிறேன். தமிழில் நாட்டம் இருந்தும் பெரிதும் புத்தகம் படிக்க வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்னவோ இல்லை…இப்பொழுது நானே எனக்கான நேரம் ஒதுக்கி படிக்க ஆரம்பித்துள்ளேன் இதற்கு முழுமுதற் காரணம் என் நண்பர்களே என்று சொல்லுவேன் , எப்படி பட்ட புத்தகங்கள் படிக்கலாம் , எனக்கு ஏற்ற புத்தகங்கள் தேர்வு செய்வது எப்படி , சில ஆசிரியர்களின் புத்தகங்கள் எப்படி பட்ட கருத்துகள் உள்ளடங்கும் என்பதெல்லாம் அவர்களிடம் தான்  கற்க ஆரம்பித்து இருக்கிறேன் ..கற்க வேண்டும்.

images (4)நான் முதலில் படிக்க ஆரம்பித்தது என்னவோ சிறுகதைகள் தான் …. சில நேர தாமதத்தால் நான் புத்தகம் படிப்பதை சிறிது காலம் தொலைத்துவிட்டேன்(நிம்மதியும்). தற்போது அந்த நேரத்தை சேர்த்தார் போல் மிகவும் அதிக ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

பதிவின் கருத்துக்கு வருகிறேன் , நீண்ட நாளுக்கு பின் எனக்கான முதல் (ஆர்வத்துக்டன்) வாங்கி படித்த புத்தகம் கொஞ்சம் அறிவியல் கதை – என்.சொக்கன்” .இப்புத்தகுதுடன் என் சுவாரசிய படிப்பை துவங்கினேன். புத்தகம் வாங்கி ஆரம்பித்த ஒரே நாளில் முடித்தும் விட்டேன்..

அனைத்து கதைகளும் அன்றாடம் நம்மாள் உபயம் செய்யும் பொருட்களின் கண்டுபிடிப்பு கதைகள்.ஒவ்வொரு கதையின் பின்னணியிலும் ஆழ கருத்துகள் அமைந்து இருந்தது கண்டு வியந்தேன்.கதைகள் படிக்கையில் அக்கால கட்டத்துக்குள் போவது போன்றதோர் ஈர்ப்பும் கொண்டேன்.அனைத்து கதைகளும் குறும்பக்கங்கள் கொண்டது தான் ஆனால் எழுத்துக்கள் பரிமாறிய விதம் சற்று அருமை என்றே சொல்லுவேன் .

கதையின் தொடக்கம் முதல் முடிவு வரை சற்றும் சலிக்காமல் நகர்ந்ததும், என் ஆர்வத்தை கூட்டியதற்கும் ஆசிரியருக்கு என் அன்பு நன்றி.இத்துடன் அடுத்த புத்தகம் ஆரம்பிக்க ஆர்வத்துடன் நண்பர்களை அணுகினேன் உதவிக்காக…உதவியும் கிடைத்தது.என் ஆர்வமும் அதிகரித்தது.

கலீல் கிப்ரான் அவர்களால் எழுதி தமிழில் – என்.சொக்கன் அவர்கள் தழுவியுள்ள புத்தகம் பெயர் “மிட்டாய் கதைகள்”, அதற்க்கு ஏற்ப கதைகளும் இனிப்பாகவும் மிட்டாய் போன்று சிறியதாகவும் அமைய பெற்றுள்ளது.50 கதைகளை உள்ளடக்கிய புத்தகம் என்றாலும் பல சின்ன சின்ன சுவாரசியமான கருத்துக்களை உள்ளடங்கியது.

ஒவ்வொரு கதையின் துவக்கத்திலும் புதிதாக பிறப்பது போன்று புது ஆரம்பம் புதிய சுவாரசியம். சின்ன சின்ன கதைகள் என்றாலும் மனதை கொள்ளையடிக்கும் கதைகள் பல, சிறு உதாரணமாக பனித்துளியின் அழகு கற்பனை எழில் (உலகம்) சொல்ல வார்த்தைகளும் இல்லை.

” புத்தகங்கள் படிக்க

தனி உலகம் நுழைய

அமைதியின் தென்றலும்

இனிமையின் கீதமாக

எழுத்துக்களை சுவாசிக்கலாம் ! “

மேலும் இது போன்ற பதிவுகள் வர வாய்ப்பும் இருக்கிறது என்று கூறிகொள்கிறேன் . என் நண்பர்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன் .

புத்தக ஆர்வத்துடன்,

தோழி

images (1)

Advertisements

4 thoughts on “புதிய உலகம் கண்டேன்

  1. புத்தகம் படிப்பதில் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன் அருமையான இரண்டு புத்தகங்களை அறிமுகம் செய்ததற்கும் நன்றி!

    நானும் இந்தப் புத்தகங்களை வாங்கிப் படிக்கிறேன்.

    ஒரு சின்ன யோசனை:
    புத்தகங்கள் எங்கு கிடைக்கும், என்ன விலை போன்ற விவரங்களையும் கொடுத்தால் நல்லது என்று தோன்றுகிறது.

    மேலும் மேலும் உங்கள் பார்வையில் புத்தக அனுபவங்களை படிக்கக் காத்திருக்கிறேன்.

    பாராட்டுக்கள்!

    • நன்றி உங்கள் கருத்துகளுக்கு !

      “கொஞ்சம் அறிவியல் கதை -என். சொக்கன் ” என்னும் புத்தகம் நான் ஒரு புத்தககண்காட்சியில் வாங்கினேன் ..விலை 70/-

      “மிட்டாய் கதைகள் – கலீல் கிப்ரான் , தமிழில் – என்.சொக்கன் ” என்னும் புத்தகம் விலை 40/-
      இப்புத்தகம் pdf வடிவில் படித்தேன் .

      மீண்டும் நன்றி !

  2. வணக்கம் தோழி எனக்கும் புத்தகங்கள் என்றால் உயிர் அது இருந்துவிட்டால் போதும் பிறகு எதுவுமே வேண்டாம் என் பதிவை படிக்க ஆரம்பித்தற்கு நன்றி வரவேற்கிறேன் படிப்பது மட்டுமல்லாமல் படித்ததை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள இந்தப் பதிவுலகம் நம்மை இணைத்து வைக்கிறது என்பதில் பெருமகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணீ வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s